Home விளையாட்டு தனஞ்சயவுக்கும் மென்டிஸுக்கும் மகேல பாராட்டு

தனஞ்சயவுக்கும் மென்டிஸுக்கும் மகேல பாராட்டு

பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் ஆட்டத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ் ஆகியோருக்கு தனது பாரா ட்டைத் தெரிவித் தார் இலங்கை அணி யின் முன்னாள் தலைவர் மகேல.

பங்களாதேஷ் குவித்த 513 ஓட்டங்கள் இமால யப் பெறுதி என்றே ஆரம் பத்தில் கருதப்பட்டது. இலங்கை அணி பதிலுக்குத் துடுப்பெடுத் தாடிய போது கருணா ரத்ன ஓட்டமெதையும் பெறாது ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை அணி தடுமாறும் என்று கருதப்பட்ட நிலையில் குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா இருவரும் 308 ஓட்டங் களை இணைப்பாட்ட மாகப் பகிர்ந்து இலங்கையை தலை நிமிர வைத்தனர்.

குசல் மென்டிஸ் 196 ஓட்டங் களுடனும், தனஞ்சய டி சில்வா 173 ஓட்டங்களை யும் குவித்தனர். இதை யடுத்து இருவரையும் வெகுவாகவே பாராட்டியுள்ளார் மகேல.