Home சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஈழ தமிழ் தேசியம்!

சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஈழ தமிழ் தேசியம்!

சுவிட்ஸர்லாந்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வாக்கு சேகரிக்கும் முயற்சியில் பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தொழிற்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஈழத்தழிர்களை இலக்கு வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அந்த கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி மார்செல் போசொனே சூரிச் நகர வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரம் ஒன்றில், “ஈழத் தமிழ் தேசியத்திற்காக உழைக்கும் மார்செல் போசொனே அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

“ஈழ விடுதலைச் செயற்பாட்டாளர்கள் பலரது வழக்கில் அறத்தின்பால் நின்று, மிகு திறனுடன் வாதாடி வெற்றி பெற்றவர்.

ஈழத் தமிழர் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பல செயல்களை அவர் மேற்கொண்டுள்ளதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரிச் மாநிலத்தில் கனிசமான அளவு இலங்கை தமிழ்கள் வாழ்ந்து வரும் நிலையில், அந்த பகுதியின் தேர்தல் வெற்றியில் இலங்கை தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.