Home புலனாய்வு செய்தி புலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ படையணியா ?

புலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ படையணியா ?

2009ம் ஆண்டு புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த கானகன் என்னும் போராளி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது. அத்தோடு தேசிய கொடியையும் கொன்றவர்கள் அவர் மேல் போத்தி இருந்தார்கள்.

பின்னர் அவர் உயிரோடு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இன் நிலையில், 59வது படைப்பிரிவின் கொமுன என்னும் பிரிவே அதிக அளவில் தமிழர்களையும் போராளிகளையும் கொலை செய்துள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி இருந்தது. அதே படைப் பிரிவில் தான் பிரியங்க செயல்பட்டுள்ளார் என்பது தற்போது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில்.

கானகன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கும். பிரித்தானியாவில் தேசிய கொடியை ஏந்தி நின்ற தமிழர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய பிரியங்கவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். கானகன் கொல்லப்பட்ட அதேபாணியை பின்பற்றியே பிரியங்க தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.