Home நிகழ்வுகள் கைது செய்யுங்கள்: லண்டனில் முழங்கிய தமிழர்கள் !!

கைது செய்யுங்கள்: லண்டனில் முழங்கிய தமிழர்கள் !!

அரசதந்திரக் காப்பு சிறப்புச் சலுகையுடன் லண்டனில் தற்காத்து நிற்கும் சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை கைது செய்யுமாறு தமிழர்கள் முழங்கினர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் சொலிடறிற்றி அமைப்பு ஆகிய கூட்டாக முன்னெடுத்த இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

முன்னராக, குறித்த அதிகாரி பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்திருந்ததது.

இந்நிலையில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்னால் அணிதிரண்ட மக்கள் முழக்கங்களை எழுப்பியதோடு, நீதிகோரி வேண்டினர்.