Home சினிமா நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு: மேலும் ஒருவர் கைது

நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு: மேலும் ஒருவர் கைது

சென்னை: நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்

மலேசிய கலை நிகழ்ச்சிக்காக நடந்த நடனப் பயிற்சியின் போது தொழில் அதிபர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலா பால், சமீபத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று அழகேசனை சென்னை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்த மலேசிய நிறுவன ஊழியரான பல்லாவரத்தைச் சேர்ந்த பாஸ்கரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடன நிகழ்ச்சியின் மேனேஜரான ரஜாக் என்பவர் முன்ஜாமின் கோரியுள்ளார்.

முன்னதாக பாலியல் தொந்தரவு விவகாரத்தில் போலீசில் புகார் அளித்த அமலா பாலுக்கு நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்தார். அதற்கு அமலா பால் நன்றியும் தெரிவித்தார்.

இதுபற்றி ட்விட்டரில், ’என் பின்னால் நின்றதற்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்கும் நன்றி. பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டு போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார். அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலை தந்தது’ என்று அமலா பால் பதிவிட்டுருந்தார்.