Home சினிமா சென்னை பாக்ஸ் ஆபிசை கதறவிட்ட நாச்சியார் இதோ வசூல் நிலவரம்…

சென்னை பாக்ஸ் ஆபிசை கதறவிட்ட நாச்சியார் இதோ வசூல் நிலவரம்…

பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி பிரகாஷ் நடிப்பில் மிரட்டலாக உருவான படம் நாச்சியார், இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்துள்ளது இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விமர்ச்சனத்தை பெற்றுள்ளது. பாலாவின் படம் என்றாலே ரசிகர்கள் கூட்டம் குவியும் ஆனால் இந்த படத்தில் ஜோதிகா இணைந்துள்ளது கூடுதலாக பூஸ்ட் கிடைத்தது போல் ஆகியுள்ளது.

இந்த படத்தின் மைய கரு பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை அழகாக எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் பாலா பொதுவாக பாலா படம் என்றாலே இயற்கையுடன் இயல்பு வாழ்க்கை ஒன்றி இருக்கும் ஆனால் இந்த முறை எதார்த்தத்தை சேர்த்து கமர்சியலாக எடுத்து நமக்கு விருந்து அளித்துள்ளார் இயக்குனர் பாலா.

இந்த படத்தின் முதல் நாள் சென்னை வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது முதல் நாள் மட்டுமே நாச்சியார் படம் ரூ32 லட்சம் வசூல் செய்துள்ளது, இதுவரை வந்த பாலா படத்திலேயே சென்னையில் அதிக வசூல் செய்தது இதுவே முதல் முறையாகும் ,இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் படக்குழு.