Home யாழ் செய்தி யாழ்ப்பாணத்தில் 5 லட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 5 லட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது

5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் அரியாலை பூம்புகார் பகுதியில் வைத்து இன்று (18) யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் சாவகச்சேரி கோவிலாக்கண்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் சுமார் 5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கேரளா கஞ்சாவினை விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதிக்கு கொண்டு வந்துள்ளார்.