Home கனேடிய செய்திகள் உலகத்திற்கு எடுத்து காட்டான கனடா நாட்டு மருத்துவர்கள்!

உலகத்திற்கு எடுத்து காட்டான கனடா நாட்டு மருத்துவர்கள்!

கனடா நாட்டு மருத்துவர்கள் ஊதிய உயர்வு வேண்டாம் என மனு கொடுத்துள்ளனர்.

பல இடங்களில் மருத்துவர்கள் ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மாறாக கனடா நாட்டு கியூபெக் நகரில் உள்ள மருத்துவர்கள் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட போது ஊதிய உயர்வை மறுத்து தமக்கு ஊதிய உயர்வு வேண்டாமென மருத்துவ வாரியத்திடம் மனு கொடுத்துள்ளனர்.

உலகத்திற்கு எடுத்து காட்டான கனடா நாட்டு மருத்துவர்கள்!

இதற்கு காரணம் கேட்ட போது, மருத்துவ பணியில் செவிலியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தற்போது செவிலியர்கள் பற்றாக்குறை காணப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் போதிய ஊதியம் இன்றி கஸ்டப்படும்போது, எம்மால் ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.