Home புலனாய்வு செய்தி முல்லேரியா காட்டுக்குள் புலிகள் ஆயுதங்களுடன்: ஆனால் மாட்டிக்கொண்டது யார் ?

முல்லேரியா காட்டுக்குள் புலிகள் ஆயுதங்களுடன்: ஆனால் மாட்டிக்கொண்டது யார் ?

Vithiya-02முல்லேரியாவில் உள்ள காட்டு பங்களா ஒன்றில் , விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் சகிதம் மறைந்திருப்பதாக உள்ளூர் வாசிகள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். குறித்த பங்களாவை பொலிசார் சுற்றிவளைத்து , பெரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சமயம் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். ஒரு 9MM கைத்துப்பாக்கி அதற்கான ரவைகள். மற்றும் T56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான ரவைகள். மேலும் 2 வாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட 4 பேருமே சிங்களவர்கள் என்றும் , அவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் என்றும் ,தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஒரு சந்தேகநபர் வேறு பிரதேசத்தில் இருந்து குற்ற வழக்கொன்றில் ,ஆஜராகுவதற்காக முல்லேரியாவிற்கு வருகை தந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. காட்டுப் பகுதியில் ஆயுதங்களோடு யார் நடமாடினாலும் அது சிங்களவர் கண்களுக்கு விடுதலைப் புலிகள் தான் போல இருக்கே.