Home உள்ளூர் செய்தி பேஸ்புக் தடை குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கும் ஜனாதிபதி

பேஸ்புக் தடை குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கும் ஜனாதிபதி

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது ஜப்பானில் உள்ள ஜனாதிபதி, இலங்கையின் நடப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் முக்கிய தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை அவர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு இன்று மாலை அறியப்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இதன் அடிப்படையிலேயே குறித்த தடையை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தீர்மானிக்கும்