Home பல்சுவை கடவுளுக்கு காணிக்கையாக கண்களை குருடாக்கிய அமெரிக்க பெண்!

கடவுளுக்கு காணிக்கையாக கண்களை குருடாக்கிய அமெரிக்க பெண்!

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் கண்களை குருடாக்கி கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த Kaylee Muthart (20 வயது) இப்பெண்ணே இவ்வாறு தன் கண்களை குருடாக்கியுள்ளார்.

இப்பெண் அதிக மத நம்பிக்கை கொண்டவர். கடந்த பெப்ரவரி மாதம் தேவாலயத்திற்கு வெளியில் வைத்து தன் கண்களை இவர் சேதப்படுத்துவதை அவ்வழயில் சென்ற பலர் கண்டுள்ளனர்.

இதனைக்கண்ட சிலர் இவரின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த முயன்றும் பலனில்லாது அப்பெண் தன் கண்களை குருடாக்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலையடுது;து விரைந்து வந்த பொலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அப்பெண், கல்லறைகளில் ஆத்மாக்கள் கட்டுண்டு காணப்படுதால் உலகம் இருண்டு காணப்படுவதாகவும் இதனால் அழிவுகள் பெருகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துமனையில் இருந்து திரும்பிய அவர் தான் தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

போதைமருந்திற்கு அடிமையாக இருந்த இவர் தான் போதை மருந்திற்கு அடிமையாக இருந்த காலப்பகுதியில் இருந்ததை விட தற்போது மிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தன் மகளுக்கு வழிகாட்டுவதற்கு ஒரு நாயை வாங்குவதற்கான அப்பெண்ணின் தாயார் நிதி சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.