கனடாவில் நண்பனுக்காக ஹொட்டலில் காத்திருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

கனடாவில் நண்பனுக்காக ஹொட்டல் அறையில் காத்திருந்த பெண்ணை ஊழியரே பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள சினுக் ஸ்டேஷன் பகுதியில் Best Value Inn என்ற பிரபல ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது.

அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமூகவலைதளம் மூலம் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அந்த அடையாளம் தெரியாத நபரை சந்திப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் குறித்த ஹொட்டலில் அறை ஒன்றை எடுத்த அந்த பெண் தங்கியுள்ளார்.

அப்போது அந்த அறைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக Calgary பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த பெண் காத்திருந்தது யாருக்காக? ஊழியருக்கு அந்த தகவல் தெரியவந்தது எப்படி? உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், துப்பறிவாளர்களின் உதவியோடு ஜதிந்தர் பால் சிங் ப்ரார்(27) என்ற அந்த ஊழியரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.