Home சர்வதேச செய்தி பப்புவா நியூகினியாவில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்!

பப்புவா நியூகினியாவில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரெஸ்பய் பகுதியில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள ரபாவுல் என்ற இடத்தின் தென்மேற்கே சுமார் 180 கிலோமீட்டர் தூரத்தில் நேற்று (24) மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக அமெரிக்க புவியியல்சார் ஆய்வு மையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி பூமிக்கு அடியில் சுமார் 60 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியானதுடன் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.