Home மருத்துவம் வாட்டி வதைக்கும் வெயில்: உடற்சூட்டை தணிக்கும் வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள்

வாட்டி வதைக்கும் வெயில்: உடற்சூட்டை தணிக்கும் வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள்

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு நோய்களை குணமாக்கும் வல்லமை படைத்தது.

முக்கனிகளில் ஒன்று வாழை. இந்த வாழையை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அனைத்தும் நமக்கு பயன்களை கொடுக்கின்றன.

அதில் வாழைப்பூவில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

பொதுவாக வாழைப்பூவை அதிகம் வாங்கி சமைக்கமாட்டார்கள். ஏனெனில் இதனை சுத்தம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் தான். ஆனால், உண்மையில் இதனை அடிக்கடி சமைத்து உட்கொள்வது மிகவும் நல்லது.

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகளை கீழே காணலாம்.

வயிறு பிரச்னைகள் நீங்க

வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் இருக்கிறது. இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்னைகள், குடலியக்க பிரச்னைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

வாழைப்பூவில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

நீரிழிவை கட்டுப்படுத்த

வாழைப்பூவில் கிளைசீமிக்-இன்டெக்ஸ் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும் இருப்பதால், இவை ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும்.

மாதவிடாய் பிரச்னைகள்

வாழைப்பூவை உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு பிரச்னைக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும்.

ரத்த சோகை

உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.

மனநிலையை மேம்படுத்தும்

வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மனக்கவலையைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்தும்.

தாய்ப்பால் அதிகரிக்கும்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்றால், வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வெயில் காலத்தில் உடற்சூட்டை தணிக்க

வாட்டி வதைக்கும் வெயிலால், பலருக்கு உடல்சூடு ஏற்படும். சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும்.

வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால், உடல்சூடு தணியும்.

எனவே, குறைந்தபட்சம் வாரத்தில் ஒருநாளாவது சமையலில் வாழைப்பூவை சேர்த்து வாருங்கள்; ஆரோக்கியமாக வாழுங்கள்.