Home சுவிஸ்லாந்து செய்திகள் விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் சுவிஸ் நாட்டில் மரணம்!

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் சுவிஸ் நாட்டில் மரணம்!

விடுதலை புலிகள் அமைப்பின் சாவகச்சேரி பிரதேச கட்டளை அதிகாரியாக செயற்பட்டவர் உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த எஸ்.ஜே.மூர்த்தி அல்லது குணாலன் மாஸ்டர் என அழைக்கப்படுபவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் 1999ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

பல நாடுகளில் தங்கியிருந்தவர் பின்னர் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளார். அவர் தனது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளார்.

குணாலன் மாஸ்டர் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போனோர் பெயர் பட்டியலிலும் உள்ளார் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.