Home வீடியோ லண்டன் தீ விபத்தில் தமிழ் குடும்பத்தின் வீடு சாம்பல் ஆனது-வீடியோ

லண்டன் தீ விபத்தில் தமிழ் குடும்பத்தின் வீடு சாம்பல் ஆனது-வீடியோ

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

லண்டன் வெம்பிளி நீஸ்டன் பகுதியில் உள்ளுர் நேரப்படி நான்கு மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த வயோதிப தாய் ஒருவர் சாமி கும்பிடும் போது ஏற்றிய விளக்கு தவறி விழுந்த நிலையில் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக முழுமையாக வீடு பற்றி எரிந்துள்ளது.

வெளியில் சென்று வீடு திரும்பிய உறவினர்கள் வீடு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.