Home சர்வதேச செய்தி வடகொரியா மறுபடியும் வெள்ளைக்கொடி -அமெரிக்கா திருவிளையாட்டு பலிக்குமா ?

வடகொரியா மறுபடியும் வெள்ளைக்கொடி -அமெரிக்கா திருவிளையாட்டு பலிக்குமா ?

வட கொரியா இன்று அமெரிக்கப் பிரஜைகளை சிறையிலிருந்து விடுவித்துள்ளதாக அமெரிக்க ஜானதிபதி ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் மற்றும் வட கொரியாவின் கிம் ஜோங்-உன் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதான இந்த நகர்வு நல்லெண்ண நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

டிரம்ப்புக்கும் – கிம்முக்குமிடையேயான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய பியோங்யாங்கிற்குச் சென்றுள்ள ராஜாங்கச் செயலாளர் மைக் பாம்போவுடன் அவர்கள் திரும்பி வரும்போது தான் அவர்களை வரவேற்கவுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Kim Hak-song, Tony Kim and Kim Dong-chul ஆகியோர் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக இன்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்றுள்ளார்.

பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றதை அடுத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படாமல் இருந்த நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேரை வட கொரியா அதிகாரிகள் கைது செய்து வைத்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக இன்று (09.05.2018) வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை டிரம்ப் சந்தித்துப் பேசப்போகும் இடமும் திகதியும் உறுதிப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.