பிக்பாஸ் புகழ் சுஜா வருணி திருமணம் யாருடன் தெரியுமா ?

பிளஸ் 2 படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜா வருணி. ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் பட வாய்புகள் கிடைக்காமல் பின் தங்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் இவர் சில ஐட்டம் பாடல்களுக்கு கூட கவர்ச்சி நடனமாடியுள்ளார்.

இது வரை கண்டுக்கொள்ள படாத நடிகையாக இருந்த இவரை தற்போது திரும்பி பார்க்க வைத்தது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழில் ஆரம்பிக்கப்பட்ட போது இவர் கலந்துக்கொள்ளா விட்டாலும், வயல் கார்ட் ரவுண்டு மூலம் பிக் பாஸ் உள்ளே நுழைந்தார். ஆரம்பம் முதல் இவர் ஓவியா போல் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

Advertisement

தற்போது பல படங்களில் சிறந்த கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் வை கடந்த சில வருடங்களாக இவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

சிங்கக்குட்டி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி தேவ், அதன்பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவரும், சுஜாவும் காதலித்து வருவதாகவும், சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்து விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை சுஜா இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார்.