Home சர்வதேச செய்தி ஈரான் அமெரிக்கா பனிப்போர் தொடங்கியது

ஈரான் அமெரிக்கா பனிப்போர் தொடங்கியது

ஈரான் அமெரிக்க.. ராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாடும் மிரட்ட முடியாது என ஈரான் ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம் அறிவித்ததிலிருந்து ஈரான் கடும் கோபத்தில் உள்ளது.

இந்நிலையில் ராணுவ பலத்தை வைத்து எங்களை எதுவும் செய்ய முடியாது என ஈரானிய ராணுவ மந்திரி ஆவேசமா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் – சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள சன்னி போராளிகளை தாக்கி, ஒடுக்கி, அழிப்பதில் இஸ்லாமிய ராணுவம் என்றழைக்கப்படும் ஈரான் நாட்டு ராணுவம் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமிர் ஹட்டாமி, எங்கள் நாட்டை தற்காத்து பாதுகாக்க தேவையான சக்தி பெற்றதாக இஸ்லாமிய ஈரானின் பலம் இன்று அமைந்துள்ளது. ராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாட்டு சக்தியும் மிரட்ட முடியாது’ என தெரிவித்துள்ளார்.