Home வவுனியா செய்திகள் வவுனியா சிறையில் நடப்பது என்ன?-கண்டுகொள்ளாத சட்டம்

வவுனியா சிறையில் நடப்பது என்ன?-கண்டுகொள்ளாத சட்டம்

வவுனியா சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதி ஒருவர் மீது சிறைக்காவலர்கள் இன்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உட்பட்டுள்ளதாகவும், சிறு குற்றம் ஒன்றிற்காக அவர் சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த கைதிக்கு இன்றைய தினம் வெளியிலிருந்து பொதி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு கிடைக்கப்பெற்ற பொதி தொடர்பில் விசாரித்தே குறித்த கைதியை சிறைக்காவலர்கள் தாக்கியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.