Home வவுனியா செய்திகள் வவுனியாவில் பெண்ணிடம் நூதனமுறையில் கொள்ளை

வவுனியாவில் பெண்ணிடம் நூதனமுறையில் கொள்ளை

வவுனியா செய்திகள்:பொருட் கொள்வனவிற்காக சென்ற வயோதிப பெண்ணிடம் மயக்க மருந்தை தூபி அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பற்றை மர்ம நபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.,

வவுனியா பஜார் வீதியில் உள்ள கடையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நடந்து சென்ற வயோதிப பெண்ணிடம் கைக்குட்டையில் சுற்றப்பட்டிருந்த கல் ஒன்றினை காட்டி அது தொடர்பாக வினவியுள்ளனர். குறித்த பெண்மணியும் அவர்களிற்கு பதில் கூற முற்பட்ட போது, குறித்த கைக்குட்டையினை திடீரென முகத்தில் அழுத்தி மயக்கமடைய செய்து அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், கைப்பையில் இருந்த எண்பதாயிரம் ரூபா பணத்தினையும் மர்ம நபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடைப்படையில், குறித்த பகுதியில் உள்ள சிசிரி கமராக்களில் உள்ள பதிவுகளை பொலிஸார் பார்வையிட்டு வருவதுடன். இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.