Home சுவிஸ்லாந்து செய்திகள் சுவிட்சலாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு

சுவிட்சலாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு

சுவிஸ்லாந்து தமிழ்:மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற சமர்களில் மரணித்த விடுதலைப் புலி உறுப்பினர்களின்; நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வொன்று சுவிட்சலாந்தில் நடைபெற்றது.

19.05.2018 சனிக்கிழமை அன்று சுவிட்சலாந்தின் செங்காளன் மாநிலத்தில், ‘நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வை, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

இவ் வணக்க நிகழ்வில் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள்> சிறுவர்களின் இனஉணர்வு மிக்க பேச்சுக்கள்> கவிதைகள்; காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புரையும் இடம்பெற்றன.

செங்காளன் மாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது தமிழீழ விடுதலைக்கும் அதற்கான தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகளுக்குமான மீள்தொடக்கப் புள்ளியாக அமையப்பெற்றதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.