Home புலனாய்வு செய்தி திருகோணமலையில் தமிழ் இராணுவ சிப்பாய் மாயம்- உம்மை காரணம் என்ன?

திருகோணமலையில் தமிழ் இராணுவ சிப்பாய் மாயம்- உம்மை காரணம் என்ன?

திருகோணமலையில் தமிழ் இராணுவ சிப்பாய் மாயம்- உம்மை காரணம் என்ன?
திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த தமிழ் சிப்பாய் ஒருவர் கடமைக்கு வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 90 தோட்டாக்கள் மற்றும் மூன்று ரவைக் கூடுகளுடன் இன்று காலை தப்பியோடியுள்ளார்.

இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சீனன் குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, பெரியமடு முருகன் கோயில் வீதியை வசிப்பிடமாக கொண்ட, சிப்பாய் இன்று காலை 2 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் சீருடையுடன் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக விமானப்படையினர் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டுக்கு அமைய மூதூர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவின் வழிகாட்டலின் கீழ் சீனன்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், விமானப்படை சிப்பாய் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் காட்டு வழியில் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேடுதலின் போது விமானப்படை சிப்பாய்க்கு வழங்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல் வைக்கும் சீருடையின் பகுதி கப்பற்துறை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.