Home பல்சுவை ஏலியன்கள் பற்றிய நீடிக்கும் மர்மம் பற்றி ஒரு அலசல்….!

ஏலியன்கள் பற்றிய நீடிக்கும் மர்மம் பற்றி ஒரு அலசல்….!

பல்சுவை தகவல்:ஏலியன்ஸ் என்றால் என்ன?
ஏலியன்ஸ் – (வேற்றுக்கிரக வாசிகள்) சமீப காலமாக இந்த வார்த்தையையும், வார்த்தைக்கு உரிய உயினங்களையுமே நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் நாம் கண்ணால் கண்டதும் இல்லை, தீர விசாரித்ததும் இல்லை. இணையத்திலும், கானொளியிலும், புத்தகங்களிலும் மட்டுமே கேள்வியுற்றிருக்கிறோம்.

அல்லது ஆயிரக்கணக்கான மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள அமெரிக்கர்கள் சொல்வதை நம்பியிருப்போம். ஆனால் இதில் எத்தனை நபர்களுக்கு ஏலியனை சந்திக்க ஆவல் உள்ளது என கேட்டால் கிட்டத்தட்ட அனைவரும் அதற்குள் வருவார்கள்.

இந்த நேரத்தில் ஒரு சிறு கேள்வி எழுகிறது, என்னவென்றால் ஏன் ஏலியன்ஸ் ௩,௪ (3,4) அடியிலும், முக்கோன வடிவிலான தலையையும், முட்டை வடிவிலான உருண்டை கண்களையும், முடி இல்லாத தோலையும் கொண்டதாகவே உருவகப்படுத்தப்படுகிறது.

அவ்வாறெல்லாம் இல்லாமலே அரிய வகை தாவரமாக இருக்கலாம், வகைப்படுத்தப்பட்டபட்டியலில் இல்லாத பூச்சிகளாக இருக்கலாம், ஆழ கடலில் அதிசயமாய் உலவும் நீர் வாழ்வியாய் இருக்கலாம், அமேசான் போன்ற காடுகளில் நம்மால் காண இயலாத அபூர்வ விலங்குகளாக இருக்கலாம், கண்ணுக்கு புலப்படாத ஒரு செல் உயிரியாக இருக்கலாம், தினமும் காணும் சிறு பாறையாகவும் இருக்கலாம் ஏலியன்ஸை காணும் அணுகு முறையை மாற்ற முயற்சி செய்யுங்கள். சரி இப்போது நம் கருத்துக்கு வருவோம். நாம் தினமும் ஏலியன்ஸை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் ஏன் அவற்றின் கூட வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம்..

ஏலியன்ஸ் என்பதற்கு வேற்றுக்கிரக வாசிகள் என்பது தான் அர்த்தம், அதே போல் இன்று நாம் வாழும் புவி, நம் பூமித்தாய், அன்னை பூமி என்று கொண்டாடப்படும் கிரகத்திற்கே நாம் ஏலியன்ஸ் தான். பூமியில் உயிரினம் தோன்றியதற்கான கோட்பாடுகள் நிறைய உள்ளன. அவற்றில் முக்கியம் வாய்ந்தது,

பூமியில் உருவான முதல் உயிரினம் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தது என்றொரு கோட்பாடும் உண்டு. ஆம்..நாலரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் கடல் இருந்தது, ஆறுகள் ஓடின. அப்போது செவ்வாயைத் தாக்கிய விண்கல் ஒன்று அதனுள் பேரதிர்வை மிகப்பெரும் வெடிப்பையும் ஏற்படுத்தியதாகவும், அப்போது செவ்வாயில் இருந்த கற்கள் விண்வெளியில் தூக்கி எறியப் பட்டதாகவும், அப்போது பூமியின் ஈர்ப்பு விசை கட்டுப்பாட்டிற்குள் அந்த கற்கள் வந்ததாகவும், அதில் ஒரு கல் பூமியில் வந்து விழுந்ததாகவும், அந்தக் கல்லில் ஒரு சிறு உயிரி ஒட்டிகொண்டு வந்து பூமியில் பல்கிப் பெருகியதாகவும் ஒரு கோட்பாடு உண்டு. இது உண்மை எனில் நாம் அனைவரும் ஏலியன்களே.

உண்மையாகவே இந்த உலகில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா?

அப்படி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? என பல கேள்விகள் பலரிடம் உள்ளது. அத்துடன் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.

வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம என்றே பதில் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் வேற்றுகிரகவாசிகள் இந்த உலகத்தில் உள்ளனர் என்று ஆய்வாளர் ஜெய்ம் மவுசன் போட்டோ ஆதாரத்துடன் கூறி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, 1947 ஆம் ஆண்டு மெக்சிகோவின், ரோஸ்வெல் பகுதியில், பறக்கும் தட்டு மோதியதில், விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில், ஏலியன் உருவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மெக்சிகோவில், 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கத்தில், தொலைக்காட்சி வர்ணனையாளர் ஜெய்ம் மவுசன் ஏலியன் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சிப்படுத்தியுள்ளார்.

இவர் பறக்கும் தட்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டும் வருகிறார் என்பதால், இந்த தகவல் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், “1947 ஆம் ஆண்டு விமான விபத்து தொடர்பான புகைப்படங்களில் ஏலியன் இறந்து படுத்து கிடப்பதை போன்ற தோற்றம் உள்ளது. அதை சுமார் ஐந்தாண்டு கால ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளோம்” என்றார். ஆனால், ஏலியன்கள் நடமாட்டம் பற்றி, நாசாவோ அல்லது வேறு எந்த ஆய்வு மையமோ உறுதி செய்யவில்லை.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி “வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம்.

அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

ஏலியன்கள் எங்கே இருக்கிறார்கள்..?

பழங்கால ஆய்வுகள், கல்வெட்டுகள் போன்றவற்றிலிருந்து எகிப்து பகுதிகளில் ஏலியன்கள் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், எகிப்திலுள்ள பிரமிடுகள் ஏலியன்களால் அமைக்கப்பட்டவை என்றொரு கருத்தும் நிலவி வருகிறது.

ஆனால், இந்தக் கதைகளுக்கு அப்பால், சில அறிவியல் விஞ்ஞானிகள் ஏலியன்கள் குறித்து வெளியிட்ட ஆதாரங்கள், வேற்றுகிரகவாசிகள் குறித்த பலரது சந்தேகங்களையும் தீவிரப்படுத்தியது நிதர்சனம். 1971ஆம் ஆண்டு அப்போல்லோ பதிநான்காம் திட்டப்பணியின் அங்கமாக நிலாவில் காலடி வைத்த ஆறாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றவர் நாசா விண்வெளி வீரர் எட்கர் மிட்செல். இவர் அளிக்கும் தகவல்கள் அமெரிக்காவின் பென்டகன், நாசா எனப் பலரையும் வியக்க வைத்தது.

ஏலியன்ஸ் குறித்து வரும் அத்தனை ஆய்வுகளும், செய்திகளும், கட்டுரைகளும், தொடர்களும், திரைப்படங்களும் ஹிட் அடித்து வருவதற்கான ஒரே காரணம், ‘ஏலியன்ஸ் இருக்கிறார்களா, இல்லையா?’ என்ற இந்தக் கேள்வி.

மனிதன் அறிவியல் உலகில் நுழைந்ததிலிருந்து விடை தெரியாமல் தவித்து வரும் ஒரே கேள்வி, ‘ஏலியன்ஸ்’.

எதற்கும் ஒரு முடிவு உண்டு என்பது போல், ஏலியன்ஸ் குறித்த சந்தேகங்களுக்கும் ஒரு முடிவு ஏற்படவுள்ளது. பல ஆண்டுகளாக ஸ்டீஃபன் ஹாக்கிங்க்ஸ் போன்ற வானவியல் நிபுணர்கள் கொண்டும், ரேடியோ சிக்னல் தொழில்நுட்பம் கொண்டும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஏலியன்கள் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? காலமான ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய விடயம்

காலமான உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்ஸால் நம்மை அழிக்க முடியும் என அவர் வாழ்ந்த காலங்களிலேயே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏலியன்ஸை பூமிக்கு அழைத்தால் அது நமக்கு எதிராக முடியும், அவர்களை தொடர்பு கொள்ள கூடாது.

அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும்.

ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் திரும்ப பதில் அளிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.

ஏலியன்ஸ் அறிவார்ந்த் வாழ்க்கை மனித வாழ்க்கையை அழிக்க முடியும் என ஹாக்கிங் பேசுவது ஒரு முறை அல்ல, பல முறை பேசியிருக்கிறார்