நாடற்றவர்களுக்கான 2018க்கான உலகக் கோப்பை உதைபந்தாட்ட போட்டி பிரித்தானியாவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
3 வது முறையாகவும் தமிழீழ அணி இந்த வருடமும் இதில் பங்கு கொண்டு இருக்கின்றது.
31/05/18 வியாழக்கிழமை அன்று பரவா அணியுடன் தமிழீழ உதைபந்தாட்ட அணி மோதி 4-0 என்ற கோல் அடிப்படையில் தோல்வி அடைந்தது .
தொடர்ந்து 02/06/18 சனிக்கிழமை எல்லான் வன்னியன் அணி உடனான போட்டியில் 2-0 அடைப்படைப்படையில் தோல்வி கண்டு தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 03/06/18 காஸ்கடிய அணியுடனான போட்டியில் 6-0 என்ற அடிப்படையில் தொடர் தோல்வி கண்டு கோனிபா உதைபந்தாட்ட போட்டியில் இருந்து வெளியேறியன.
16 நாடற்ற அணிகள் பங்கு பற்றி இருந்த நிலையில் இதற்கான தரப்பட்டியலில் பின்னால் இருக்கும் அணிகளுடனான போட்டிக்கு தமிழீழ அணி தயாராகிக்கொண்டு இருக்கின்றன .