Home நிகழ்வுகள் முல்லைத்தீவு சுதந்திரபுர தமிழர் படுகொலை 20வது ஆண்டு நினைவு நாள்

முல்லைத்தீவு சுதந்திரபுர தமிழர் படுகொலை 20வது ஆண்டு நினைவு நாள்

முல்லைத்தீவு செய்தி:முல்லைத்தீவு – சுதந்திரபுர படுகொலையின் 20வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்று சுதந்திரபுரம் பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் பகுதியில் அமைத்திருந்த விடுதலைப் புலிகளின் உணவு வழங்கள் பகுதியை இலக்கு வைத்து விமானப்படையினரும், பீரங்கிபடையினரும் இனைந்து தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல்களின் இலக்கு தவறியதினால் 33 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பொதுமக்களின் 20வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், மாகாணசபை உறுப்பினர் அ.புவனேஸ்வரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.