Home புலனாய்வு செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் புலனாய்வு தகவல்கள் வெளியாக உள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் புலனாய்வு தகவல்கள் வெளியாக உள்ளது

புலனாய்வு தகவல்:போர்க் காலத்திலான புலனாய்வு தகவல்களை அம்பலப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதும் அதன் பின்னரும் இரகசிய நடவடிக்கைகளுக்காக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இருந்த, தங்கியிருந்த இடங்கள், பயன்படுத்திய வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர் மட்டத் தகவல்களின் அடிப்படையில் கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் தெளிவுபடுத்தல்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், இராணுவ புலனாய்வுத் தகவல்களை வெளியிடும் இந்த நடவடிக்கை உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இடம்பெற்றதில்லை என உயர் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர்க் காலத்திலும் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் எதிராகவும் நாடு முழுவதிலும் இரகசிய இடங்களில் இருந்து படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்படவுள்ளன.

இவ்வாறு இரகசிய தகவல்கள் வெளியிடப்பட்டால் ஒட்டுமொத்த புலனாய்வுப் பிரிவும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக, புலனாய்வுப் பிரிவினர் மல்வானைப் பிரதேசத்தில் தங்கியிருந்த வீடு ஒன்று தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்