Home சுவிஸ்லாந்து செய்திகள் பாலியல் தொழிலாளி மீதான மோகம் சுவிஸ் நபருக்கு 17 ஆண்டுகள் சிறை

பாலியல் தொழிலாளி மீதான மோகம் சுவிஸ் நபருக்கு 17 ஆண்டுகள் சிறை

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலாளியை போதை மருந்து கலந்த பானத்தால் கொடூரமாக கொலை செய்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் முதலீட்டு ஆலோசகரராக பணிபுரியும் 50 வயது நபர் ஒருவர் சூரிச் நகரில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் வாடிக்கையாக அறை எடுத்து தங்குவது வழக்கம்.

இந்த நிலையில் அவருக்கு 25 வயது மதிக்கத்தக்க பாலியல் தொழிலாளி ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டது.

இருவரும் பல முறை குறித்த ஹொட்டலில் சந்தித்து தங்கள் நெருக்கத்தை உறுதி செய்தும் வந்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த பாலியல் தொழிலாளியின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் இவரே பூர்த்தி செய்தும் வந்துள்ளார்.

இது நாளடைவில் குறித்த பொருளாதார ஆலோசகரின் மொத்த சொத்தையும் இழக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

ஒருகட்டத்தில் தமது குடியிருப்பில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை விற்று அந்த பாலியல் தொழிலாளிக்கு பண உதவிகள் செய்து வந்துள்ளார்.

இதனால் மிகவும் சிக்கலுக்கு உள்ளான அந்த பொருளாதார ஆலோசகர் போதை மருந்து கலந்த பானத்தை தனக்கு மிகவும் நெருக்கமான அந்த பாலியல் தொழிலாளிக்கு அளித்து கொலை செய்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை முடிவடைந்த நிலையில் குறித்த நபருக்கு சூரிச் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி கொலை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளியின் குடும்பத்தாருக்கு 37,500 பிராங்க் தொகை இழப்பீடாகவும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.