Home கனேடிய செய்திகள் கனடா ஒண்டாரியோ பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் அமைச்சராவார்களா??

கனடா ஒண்டாரியோ பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் அமைச்சராவார்களா??

2018 ஜூன் 7ல் நடைபெற்ற ஒண்டாரியோ பாராளுமன்றத்திற்க்கான 42-வது பொதுத்தேர்தலில், Progressive Conservative கட்சி 76 இடங்களையும், NDP கட்சி 40 இடங்களையும், Liberal கட்சி 7 இடங்களையும், Green கட்சி 1 இடத்தினையும் பெற்று, Progressive Conservative தலைவர் திரு Doug Ford அவர்கள் ஒண்டாரியோ பாராளுமன்றத்தின் ப்ரீமியராக இன்று 29/06/2018 காலை 11 மணிக்கு குயின்ஸ் பார்க்கில் பதவியேற்கிறார்.

இப்பதவி ஏற்பு வைபோகத்தில் 20 அமைச்சர்கள் பதவியேற்கலாம், இதில் முக்கியமாக Christine Elliott (Newmarket-Aurora), Rod Phillips (Ajax), Caroline Mulroney (York-Simcoe), Peter Bethlenfalvy (Pickering-Uxbridge), Greg Rickford (Kenora-Rainy River), and Doug Downey (Barrie-Springwater-Oro-Medonte). Lisa MacLeod (Nepean), Raymond Cho (Scarborough North), and Vic Fedeli (Nipissing). ஆகியோர் அமைச்சர்கள் ஆகலாம் என அறியப்படுகிறது.

இதேவேளை கனடிய அரசியல் வரலாற்றில் ஒண்டாரியோ பாராளுமன்றத்திற்கு முதன் முதலில் தெரிவான திரு.லோகன் கணபதி, திரு.விஜய் தணிகாச்சலம் ஆகிய ஈழத்தமிழர்களில் ஒருவராவது அமைச்சர் ஆகலாம் என நம்பப்படுகிறது.