Home விளையாட்டு தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

கிரிக்கெட் விளையாட்டு:இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் விபரம் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக தினேஷ் சந்திமால், உதவி தலைவராக சுரங்க லக்மலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உபாதைகளால் அவதிப்படும் அஞ்சேலோ மத்தியூஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை , ஹேரத் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டாலும் அவர்களது உடற்தகுதி நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட இலங்கை அணி விபரம்.

தினேஷ் சந்திமால் –தலைவர்
அஞ்சலோ மத்தியூஸ்
திமுத் கருணாரத்ன
குசல் மெண்டிஸ்
குசல் ஜனித் பெரேரா ( உடற்தகுதி நிரூபிக்கப்பட வேண்டும்)
தனுஷ்க குணதிலக
தனஞ்சய டி சில்வா
ரோஷன் சில்வா
நிரோஷன் டிக்வெல்ல
ரங்கன ஹேரத் ( உடற்தகுதி நிரூபிக்கப்பட வேண்டும்)
சுரங்க லக்மால் – (உதவி தலைவர்)
டில்ருவன் பெரேரா
அகில தனஞ்சய
லஹிரு குமார
லக்ஷன் சந்தகன்
கசுன் ரஜித்த
மேலதிக வீரர்கள்

அசித்த பெர்னாண்டோ
தஸுன் ஷானாக
மலிந்த புஷ்பகுமார
சேஹான் ஜயசூரிய
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12 ம் திகதி காலி மைதானத்திலும், இரண்டாவதும் இறுதியான டெஸ்ட் எதிர்வரும் 20 ம் திகதி SSC மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.