Home வீடியோ டயர் காற்று வெடித்து ஒருவர் மரணம் -அதிர்ச்சி வீடியோ

டயர் காற்று வெடித்து ஒருவர் மரணம் -அதிர்ச்சி வீடியோ

வீடியோ செய்திகள்:இலங்கையில் மாறுபட்ட வகையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மத்துகம பிரதேசத்தில் டயர் ஒன்று வெடித்து நபர் ஒரு உயிரிழந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடீவியில் பதிவாகியுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள டயர் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நிலையத்தில் சேவை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் பேருந்திற்கு டயர் மாற்றும் போது திடீரென டயர் ஒன்று வெடித்துள்ளது. இதன் போது காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் அந்த நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது. இலங்கையில் விபத்து மூலமான உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மாறுபட்ட வகையில் டயர் ஒன்று வெடித்து நபர் ஒருவர் உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.