Home நிகழ்வுகள் தேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் மாணவர்கள் பல வெற்றிகள்

தேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் மாணவர்கள் பல வெற்றிகள்

நிகழ்வுகள்:இலங்கை 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போட்டிகளில், யாழ். பல்கலைக்கழகத்தின் கலை, தொழில்நுட்ப மற்றும் விவசாய பீடங்களைச் சேர்ந்த மாணர்கள் 10 பேருக்கே இந்தப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

அந்தவகையில் 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான ‘குமித்தே’ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள் விபரம்,

ஜெபப்பிரியா (வெள்ளிப் பதக்கம்),
கிருசிகா (வெள்ளிப் பதக்கம்),
நிமேஷா (வெள்ளிப் பதக்கம்),
ரசிந்திரா (வெள்ளிப் பதக்கம),
மரிக்கார் (வெண்கலப் பதக்கம்),
திசுரிநிமேஷா (வெண்கலப் பதக்கம்),
சந்தமாலி (வெண்கலப் பதக்கம்),
கந்சனி (வெண்கலப் பதக்கம்),
கெட்டி ஆராச்சி (வெண்கலப் பதக்கம்),
புஷ்பகலா (வெண்கலப் பதக்கம்) வென்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான கராத்தே பயிற்சிகளை பொறியிலாளர் ‘சென்சை’ றொஷிஹரிந் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.