Home சமூக சீர்கேடு சிங்கள சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது

சிங்கள சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது

சமுக சீர்கேடு:தணமல்வில பிரதேசத்தில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளம் குடும்பதஸ்தர் ஒருவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 22 வயதான திருமணமான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி சிறுமி காணாமல்போயுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் தணமல்வில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தபோது கடந்த 29ஆம் திகதி சிறுமி மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரும் சிறுமியின் பெற்றோருடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சந்தேகநபர், சிறுமியை அழைத்துச் சென்று பலஹருவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் சில நாட்கள் தங்க வைத்துள்ளார். அப்போது சந்தேகநபர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த இளைஞர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.