Home வவுனியா செய்திகள் வவுனியாவில் 15 வயதுச் சிறுமிகளைக் கடத்தி கட்டாயப்படுத்தி நடந்த கொடூரம்!!

வவுனியாவில் 15 வயதுச் சிறுமிகளைக் கடத்தி கட்டாயப்படுத்தி நடந்த கொடூரம்!!

வவுனியா செய்திகள்:இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளால் அழைத்­துச் செல்­லப்­பட்டு கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்டு பாலியல்துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அலரி விதை ஊட்­டப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்டு இரு சிறு­மி­கள் வவு­னியா பொது மருத்­து­வ­ம­னை­யில் நேற்­றி­ரவு சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டது.

இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளால் அழைத்­துச் செல்­லப்­பட்டு கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்டு பாலியல்துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பின் அலரி விதை ஊட்­டப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்டு இரு சிறு­மி­கள் வவு­னியா பொது மருத்­து­வ­ம­னை­யில் நேற்­றி­ரவு சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டது.

வவு­னியா, பெரி­யார்­கு­ளம் பிர­தே­சத்­தைச் சேர்ந்த 15 வய­து­டைய இரு சிறு­மி­களே மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். சிறு­மி­கள் இரு­வ­ரும் உற­வி­னர்­கள். இவர்­கள் நேற்­றுப் பாட­சாலை முடிந்து வீடு திரும்­பிய பின்­னர் பாடப் புத்­த­கம் வாங்­கு­வ­தற்­காக சைக்­கி­ளில் சென்­ற­னர்.

அப்­போது ஓட்­டோ­வில் வந்த இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் அவர்­களை கட்­டா­யப்­ப­டுத்தி சாந்­த­பு­ரம் பகு­திக்கு அழைத்­துச் சென்று துன்­பு­றுத்­தி­யு­து­டன், கத்தி முனை­யில் கட்­டா­யப்­ப­டுத்தி அரளி விதை­யை­யும் உண்ண வைத்­த­னர் என்று சிறு­மி­க­ளின் உற­வி­னர்­க­ளால் கூறப்­ப­டு­கின்­றது.

சிறு­மி­க­ளைக் காண­வில்லை என்று உற­வி­னர்­கள் மாலை தேடிக் கொண்­டி­ருந்த நிலை­யில், சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்பி வீட்­டுக்கு வந்த சிறு­மி­கள் நடந்­த­வற்­றைக் கூறி­யதை அடுத்து இரவு 9 மணி­ய­ள­வில் சிறு­மி­கள் பெற்­றோ­ரால் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அரலி விதை கொடுக்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தால் அதற்­கான சிகிச்­சை­கள் நேற்­றி­ரவு வழங்­கப்­பட்­டன என்­றும், மருத்­துவ சோத­னை­க­ளின் பின்­னரே மேல­திக விவ­ரங்­க­ளைக் கூற முடி­யும் என்­றும் வவு­னியா மருத்­து­வ­னைத் தக­வல்­கள் தெரி­வித்­தன.