Home விளையாட்டு சொந்த மண்ணில் தொடரை இழந்த இலங்கை அணி

சொந்த மண்ணில் தொடரை இழந்த இலங்கை அணி

விளையாட்டு செய்தி:இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 7 இழந்து 363 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் ஹெட்ரிக்ஸ் 102 ஓட்டங்களையும், டுமினி 92 ஓட்டங்களையும், மில்லர் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திசார பெரேரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 364 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 78 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 84 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள தென்னாபிக்க அணி 3 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.