Home விளையாட்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு ஷாக் கொடுத்த வங்கதேச அணி தொடரை கைபற்றியது

மேற்கு இந்திய தீவுகளுக்கு ஷாக் கொடுத்த வங்கதேச அணி தொடரை கைபற்றியது

விளையாட்டு செய்திகள்:மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறையில் 19 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரை 2-1 என கைபற்றியது

மேற்கு இந்திய தீவுகள்- வங்கதேசம் இடையேயான டி20 போட்டி அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா நகரில் நேற்று நடந்தது. முன்னதாக நடந்த முதல் இரண்டு டி20 போட்டிகளை இவ்விரு அணிகள் தலா ஒரு வெற்றிபெற்றதால் இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி மிக முக்கியாக இருந்தது.

இதையடுத்து வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இதைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிய வங்கதேச அணி வீரர் லிதன் தாஸ் 32 பந்துகளை எதிர்கொண்டு 61 ரன் விளாசினார். இதில் 6 பவுண்ட்ரி, 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனால் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் குவித்தது.

இதைத்தொடர்ந்து 186 ரன் இலக்கை சேஸிங் செய்ய தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி டி20 சாம்பியன்ஸ் அணி போல் ஆடாமல் சொதப்பலான பேட்டிங்கை வெளிபடுத்தியது.

அந்த அணி 17.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன் எடுத்தபோது மழை குறிக்கிட்டது. மேலும் மழை நீடித்ததால் யில் வெற்றியாளரை தீர்மானம் செய்யும் விதமாக டக்வர்த் லூவிஸ் முறை பயன்படுத்தப்பட்டது.

மேற்கு இந்திய தீவுகள் அணி 17.1 ஓவரில் 135 ரன் மட்டுமே எடுத்து 19 ரன் பின்தங்கிய இருந்தது. இதனால் வங்கதேச அணி இந்த போட்டியை வெற்றிபெற்றது தொடரை 2-1 என கைபற்றியது.

வங்கதேச வீரர் லிதன் தாஸ் ஆட்டநாயகன் விருதையும், ஷகிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

முன்னதாக மேற்கு இந்திய தீவுகளிடம் டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேச அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை அடுத்தடுத்து வென்று அசத்தியுள்ளது.

வங்கதேசத்தின் இந்த அசத்தலான செயலை கண்ட நெட்டிசன்கள் அடங்கப்பா இது நம்ம லிஸ்டலயே இல்லயே என வாயை பிளந்துள்ளனர்.