Home பல்சுவை ஆவிகளுடன் வாழ்க்கை நடத்தி குழந்தை பெறும் அதிசய பெண்!

ஆவிகளுடன் வாழ்க்கை நடத்தி குழந்தை பெறும் அதிசய பெண்!

பல்சுவை செய்திகள்:இங்கிலாந்து பிரிஸ்டலைச் சேர்ந்த அமேதிஸ்ட் ரெல்ம் என்ற 30 வயதுடைய பெண் ஆவிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கூறி வருகிறார்.

இந்நிலையில், இதுவரை அமேதிஸ்ட் 20 ஆவிகளுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும், மனிதர்களை விட ஆவி தன்னை அதிகளவில் மகிழ்ச்சியாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சமீபத்தில் அவர் ஒரு பரபரப்பான விடயத்தை கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

அதில், அவர் அவுஸ்திரேலியாவில் சந்தித்த ஒரு ஆவியுடன் மிகவும் சீரியஸாக உறவு கொண்டிருப்பதாகவும், மேலும் அந்த ஆவியுடன் இணைந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தன்னால் அந்த ஆவிகளை நன்கு உணர முடிவதோடு, வெவ்வேறு ஆவிகளை வித்தியாசப்படுத்தி உணரவும் முடியும் என்கிறார். முதல் முறை அவர் ஒரு புதர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது தான் தன் முதல் ஆவிக் காதலனை சந்தித்ததாகவும் தன்னால் அதைப் பார்க்க இயலாவிட்டாலும், அதனுடன் பேசவும், உறவு கொள்ளவும் முடிந்தது என்கிறார் அவர்.

இன்னொரு ஆவி, அவர் வெவ்வேறு ஆவிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து அவருடன் கோபித்துக் கொண்டதாகவும் கூட தெரிவிக்கிறார்.

இதனால் இனி அந்த உறவு முறையை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதனுடன் தொடர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு ஆவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமா என்று அவரிடம் கேட்டபோது, ஏற்கனவே ஒரு பெண் கர்ப்பமுற்றதாகவும், அவரால் உடல் மன சமநிலையை சரியாக கவனித்துக் கொள்ள இயலாததால் அந்தக் கரு இறந்து விட்டதாகவும், எனவே ஒரு ஆவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம்தான் என்றும் அமேதிஸ்ட் கூறியுள்ளார்.