Home வவுனியா செய்திகள் வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் சிங்கள பெண்கள் இருவர் கைது

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் சிங்கள பெண்கள் இருவர் கைது

வவுனியா செய்திகள்:வவுனியா – மாங்குளம் பகுதியில் 70 ஆயிரம் ட்ரமடோல் போதை மாத்திரைகளுடன் இரண்டு பேர் செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 வயதான பெண்ணும், 18 வயதான இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மாத்தளை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போதை மாத்திரைகள் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.