Home உள்ளூர் செய்தி புத்தர் மாதிரி பீலா விடும் மஹிந்த முள்ளிவாய்கள் அவலத்துக்கு காரணம் புலிகளாம்

புத்தர் மாதிரி பீலா விடும் மஹிந்த முள்ளிவாய்கள் அவலத்துக்கு காரணம் புலிகளாம்

உள்ளூர் செய்திகள்:தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த பல முறை அழைப்பு விடுத்தேன். இருப்பினும், வே.பிரபாகரன் என்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வரவில்லை” என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை காரணமாகவே தொடர்ந்தும், இரத்த ஆறு ஓடவேண்டிய சூழல் உருவானதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்விடயம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூம் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“25 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும், ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் சரியான முடிவை எடுக்க இருவரும் சந்தித்து பேச வேண்டும்.

குறித்த பேச்சுவார்த்தைக்கு நீங்கள் கொழும்பு வர தயாராக உள்ளீர்களா? இல்லை என்றால் நான் கிளிநொச்சிக்கு வர தயாராக உள்ளேன்” என அந்த அழைப்பில் தெரிவித்திருந்ததாக மஹிந்த கூறியுள்ளார். ஆனால் அவரிடம் இருந்து இதற்கான பதில் கிடைக்கவில்லை என்றும் மாறாக தற்கொலை குண்டு தாக்குதல்கள், துருப்புக்கள் மீதான தாக்குதல்களே அதிகம் இடம்பெற்றதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் 2006ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதில் “வன்முறையை நிறுத்துங்கள், அப்பாவி குடிமக்களைக் கொல்லாதீர்கள், ஆயுதப்படைகளைத் தாக்க வேண்டாம், நீங்கள் துப்பாக்கிச் சூடுகளையும் கொலைகளையும் நிறுத்தவில்லை என்றால், உங்கள் உடல் ரீதியான அழிவு தொடர்பில் நான் கட்டளையிட வேண்டிய நிலை ஏற்படும்” என கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதன் விளைவே, 2009 ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி நந்திக்கடலில், அவரது உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.