Home விளையாட்டு விமர்சிக்கப்படும் கோலிக்கு ஆதரவாக சங்ககாரா கருத்து

விமர்சிக்கப்படும் கோலிக்கு ஆதரவாக சங்ககாரா கருத்து

விளையாட்டு செய்திகள்:மோசமான ஆட்டத்தால் விமர்சிக்கப்படும் இந்திய அணி மற்றும் கோலிக்கு ஆதரவாக முன்னாள் இலங்கை வீரர் சங்ககாரா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரசிகர்களும் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்திய கேப்டனான கோலி மட்டும் பேட்டிங்கில் சிறிது ஆறுதல் அளித்து வந்தார். தற்போது முதுகுவலி காரணமாக ஓய்வில் இருக்கும் கோலி முழுமையாக குணமாகாவிட்டால் அஸ்வின் கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கடுமையாக விமர்சிக்கப்படும் இந்திய அணி மற்றும் கோலிக்கு ஆதரவாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா பேசியுள்ளார். அவர் கூறுகையில்,

“என்னைப் பொறுத்தவரை கோலி சிறந்த கேப்டன். காலம் செல்ல செல்ல இன்னும் சிறப்பாகிக் கொண்டேதான் போவார். எல்லோருக்கும் சில பலவீனங்கள் இருப்பது இயல்புதான்.

இந்திய அணியின் ஒன் மேன் ஆர்மியாக ரன் குவித்து வந்தவர் கோலி. ஆனால் அவருடன் மற்ற வீரர்களை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. இந்திய அணியே கோலியை நம்பித்தான் உள்ளது எனக் கூறுவது சரியல்ல. மற்ற வீரர்களும் சிறந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

மேலும் புஜாரா, ரஹானே, தினேஷ் கார்த்திக், தவான், முரளி விஜய், கேஎல் ராகுல் ஆகியோரையும் வெகுவாக பாராட்டினார்.