Home பிரதான செய்திகள் இலங்கை விடயத்தில் ஐ.நா பொதுச்செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இலங்கை விடயத்தில் ஐ.நா பொதுச்செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

பிரதான செய்திகள்:இலங்கையில் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்கு வீரர்கள் நியமனங்களுக்கு அப்பால் சேர்த்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே லெபனானில் 44 இலங்கை படையினர் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்றுகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் நியமங்களுக்கு அப்பால் இணைக்கப்பட்டுள்ள அவர்கள் தொடர்பில் இன்னமும் ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசாரணை செய்யப்படவுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்ட போதும் அவை பதவி அடிப்படையில் உரியமுறையில் பார்க்கப்படவில்லை.

இந்த நிலையிலும் கூட அன்டனியோ குட்டரஸ் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பில் எவ்வித பொறுப்புக்கூறல் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.