Home சமூக சீர்கேடு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகிக்கு ஏற்பட்ட நிலை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகிக்கு ஏற்பட்ட நிலை

சமூக சீர்கேடு:கிளிநொச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்வி நிலைய நிர்வாகியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சிவபாலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இயங்கி வரும் குறித்த தனியார் கல்வி நிலையத்தில் 18 வயதிற்கு குறைந்த மாணவர்கள் பலர் கல்வி கற்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு கல்வி கற்று வருகின்ற மாணவிகளுக்கு, கல்வி நிலைய நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கண்டாவளை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் கண்டாவளை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் முயற்சி செய்துள்ளனர்.

இதனடிப்படையில் தர்மபுரம் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, நிர்வாகி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர் தனது மனைவியின் துணையுடனேயே இந்த மோசமான செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.