Home புலனாய்வு செய்தி இலங்கையில் சீனா என்ன செய்கிறது?அமெரிக்கா வெளியிட்ட தகவல்

இலங்கையில் சீனா என்ன செய்கிறது?அமெரிக்கா வெளியிட்ட தகவல்

புலனாய்வு செய்திகள்:சீனாவின் நீண்ட கால திட்டத்திற்கமைய தனது போர் வலிமையை ஏனைய நாடுகளுக்கு எதிராக பிரகாசிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக வெளிநாடுகளில் தங்கள் இராணுவ தளத்தை நிர்மாணிப்பதற்கு சீனா திட்டமிடுவதாக பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜுலை மாதம், கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள Djibouti பகுதியில் தனது முதலாவது வெளிநாட்டு இராணுவ தளத்தை சீனா நிறுவியுள்ளது.

சில மாதங்களில் சர்ச்சைக்குரிய இலங்கையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றியுள்ளதாக பென்டகன் அறிக்கையை அடிப்படையாக கொண்டு CNN செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்வதற்காக சீனாவினால் விமானம் ஒன்றை கொண்டு செல்ல கூடிய கப்பல் தளம் ஒன்றை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக விமானிகள் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.