Home மருத்துவம் தர்பூசணி விதைகளை இப்படி சாப்பிடல் சிறுநீரகக் கோளா நீங்கும்

தர்பூசணி விதைகளை இப்படி சாப்பிடல் சிறுநீரகக் கோளா நீங்கும்

பொது மருத்துவம்:வெயில் காலம் வந்து விட்டாலேயே அனைவரும் தேடும் ஒரு பழம் தான் இந்த தர்பூசணிப் பழம். நல்ல சுவையுடன் காணப்படுவது மட்டுமல்லாது எண்ணற்ற சத்துக்களும் இதில் புதைந்துள்ளன.

பொதுவாக அந்தப் பழத்தை உண்பவர்கள் அதன் விதைகளை அகற்றி விடுவதுண்டு. ஆனால் அதன் விதைகளில் எவ்வளவு நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தர்பூசணி விதையில் அதிகளவான புரோட்டீன் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு கோப்பை உலர வைத்த விதையில் சுமார் 30.6 கிராம் புரோட்டீன் காணப்படுகின்றது. அத்துடன், அமினோ அமிலங்கள், கனியுப்புக்கள், மக்னீசியம் மற்றும் விட்டமின்-டி என்பனவும் காணப்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த விதை சிறுநீரகக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதோடு சிறுநீரகக் கற்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அதுமட்டுமின்றி மூளையின் ஆரோக்கியம் மற்றும் ஞாபகசக்தி போன்றவற்றிற்கும் இது உதவுகின்றது.

தர்பூசணிப் பழத்தின் விதைகளில் உள்ள பைபர், சமிபாட்டுத் தொகுதியை பாதுகாப்பதோடு அழற்சிக்கு எதிராகவும் போராடுகின்றது.

இந்த விதைகளை எவ்வாறு உணவுடன் உட்கொள்வது?

தர்பூசணி விதைகளை உட்கொள்வதற்கு முன்பு, அவற்றை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை குறைந்தது 7 நாட்களுக்கு சூரிய ஒளியில் படும்படி வைத்து உலர வி டவேண்டும்.

01. விதைகளுடன் சேர்த்து இதனையும் உட்கொள்ளலாம்.
02. சான்விச் மற்றும் சோஸ் என்பவற்றில் கலந்து உண்ண முடியும்
03. சலாதுடன் தூவி உட்கொள்ள முடியும்.
04. ஸ்மூத்தியுடன் கலந்து பருகலாம்.
05. பாண் மற்றும் குக்கீஸ் போன்றவற்றில் வைத்து பேக் செய்து உண்ணலாம்.
தர்பூசணித் தேநீர் செய்வது எப்படி?

தேரவையான பொருட்கள்:
– 2 லீட்டர்கள் அல்லது 8 கோப்பைத் தண்ணீர்
– 4 தேக்கரண்டி அரைத்த தர்பூசணி விதைகள்
செய்முறை:
முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் பாத்திரமொன்றை எடுத்து அதில் அரைத்த தர்பூசணி விதைகளை இட்டு கொதிக்க வைத்த தண்ணீரை அதில் ஊற்றவும். அந்த தண்ணீர் ஆறிய தன் பின்னர் தண்ணீரை வடிகட்டி தேநீராகப் பருகலாம். இதனை நாளொன்றுக்கு நான்கு முறை பருகலாம்.