Home சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸ் அதிகாரிகளுக்கு கை குலுக்க மறுத்ததால் குடியுரிமையை இழந்த குடியேற்றவாசிகள்

சுவிஸ் அதிகாரிகளுக்கு கை குலுக்க மறுத்ததால் குடியுரிமையை இழந்த குடியேற்றவாசிகள்

சுவிஸ் செய்திகள்:புலம்பெயர்ந்து சென்று சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு தம்பதியினருக்கு, கை குலுக்க மறுத்த காரணத்தினால் அந்நாட்டில் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

சொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளில் சென்று குடியேறும் மக்கள் அந்த நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்ற நிலையில், அந்த நாடுகள் அதற்காக பல கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிப்பதோடு, சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.

இவ்வாறானதொரு நிலையே குறித்த தம்பதியினருக்கும் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள லாசன்னே நகரில் வசித்து வந்த இஸ்லாமிய தம்பதியினர், அண்மையில் அந்நாட்டில் குடியுரிமைபெற விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், அவர்களை விசாரிக்கவென அதிகாரிகள் சென்றிருந்தவேளை குறித்த முஸ்லிம் தம்பதியினர் எதிர்பாலின அதிகாரிகளுக்கு கை குலுக்க மறுத்துள்ளனர்.

இதன்காரணமாக குடியுரிமை கோரிய அவர்களது விண்ணப்பம் அந்த நாட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினர் நகர மேயரிடம் முறையிட்டுள்ளதுடன், எங்கள் வழக்கப்படியே நடந்து கொண்டதாக விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் பின்னர் அவர்களது குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என லாசன்னே துணை மேயர் அறிவித்துள்ளார்.

மேலும், இதுபோல கடந்த 2016ஆம் ஆண்டு சிரியாவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு கை குலுக்க மறுத்துவிட்டதற்காக அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.