Home சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸ் புலம்பெயர்ந்தோருக்கான முகாங்கள் மூட காரணம் என்ன?

சுவிஸ் புலம்பெயர்ந்தோருக்கான முகாங்கள் மூட காரணம் என்ன?

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தில் அகதிகளுக்காக செயல்பட்டு வந்த முகாம்களை மாகாண நிர்வாகம் படிப்படியாக மூடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுவிட்சர்லாந்தில் அகதிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர். இது அங்குள்ள அரசு நிர்வாகத்தினரை திணறடிக்க செய்தது.

ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சுவிஸ் நோக்கி படையெடுக்கும் அகதிகளின் எண்ணிக்கையானது கடும் சரிவை சந்தித்து வருகிறது.

2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கை வைத்துள்ள அகதிகளின் எண்ணிக்கை வெறும் 7,820 என கூறப்படுகிறது.

இதனால் அகதிகள் முகாம்களை செயல்படுத்தி வந்த பெரும்பாலான மாகாணங்கள் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் டசின் கணக்கிலான முகாம்களை மூடியுள்ளனர்.

மேலும் மத்திய அரசின் கீழில் செயல்பட்டுவரும் முகாம்களில் தற்போது 3,000 காலி இடங்கள் உள்ளதாகவும், இது 5 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி அகதிகளுக்கு உறுதுணையாக செயல்பட்டுவந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவந்த சுமார் 19 முகாம்களை கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே படிப்படியாக மூடி வந்துள்ளது.

மேலும் 200 முழுநேர பணி வாய்ப்புகளையும் ரத்து செய்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த முகாம்களில் பணியாற்றிவந்த பணியாளர்களின் 50 சதவிகித ஊழியர்களை மட்டும் வேறு முகாம்களின் பணிக்கு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.