Home உள்ளூர் செய்தி பேருந்துகளில் ஆபாச மற்றும் பாலியல் சிந்தனைகளை தூண்டக்கூடிய பாடல்கள் தடை

பேருந்துகளில் ஆபாச மற்றும் பாலியல் சிந்தனைகளை தூண்டக்கூடிய பாடல்கள் தடை

உள்ளூர் செய்தகள்:ஆபாச மற்றும் பாலியல் சிந்தனைகளை தூண்டக்கூடிய பாடல்களை பேருந்துக்களில் ஒலிபரப்புவதை தடுக்க வேண்டும் என்று வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 20ஆம் ஆண்டு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய பாடல்களை ஒலிபரப்புவதை அனைத்து பேருந்து உரிமையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து தடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

வாள்வெட்டு கலாச்சாரங்கள், ரவுடித்தனங்கள், சோம்பல் தன்மைகளைப் பிரதிபலிக்கும் படங்களைத் தவிர்த்து கருத்தாழம் மிக்க நகைச்சுவைகளுடன் கூடிய சிறந்த படங்கள் காட்சிப்படுத்த வேண்டும். இதனை தான் மக்களும் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுமார் 20-30 வருடங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் சிறந்த சாரதிகளாக இனங்காட்டப்பட்டிருந்தனர். ஆனால் இன்று அந்த நிலையில்லை என்றும் வடக்கு முதலவர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

மேலும், வடக்கில் இன்று குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு தென்னிந்திய திரைப்படங்களும், அதில் ஒலிபரப்பப்படும் பாடல்களும் ஓர் காரணமாக அமைந்து விட்டன. அதனை தடுக்க வேண்டிய கட்டாயம் தமிழ் தலைமைகளுக்கு உண்டு.

வாள்வெட்டு, கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச் செயல்கள் திரைப்படத்தின் பாணியில் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் வடக்கு முதல்வர் வவுனியாவில் இவ்வாறான கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.