Home உள்ளூர் செய்தி திருகோணமலையில் ஹெரோயின் உடன் இருவர் கைது

திருகோணமலையில் ஹெரோயின் உடன் இருவர் கைது

உள்ளூர் செய்திகள்:திருகோணமலை – சிரிமா புரத்தில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது சந்தேகநபர்களிடம் இருந்து 71 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும், மீட்டகப்பட்ட போதைப் பொருளையும் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் கூறியுள்ளார்.

மேலும், இவர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தலைமையக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.