பிரதான செய்திகள்:முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமவீர ஆகியோர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரபணுவில் வந்த பேய்கள் என கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
வட மாகாணத்தில் காணப்படும் யுத்த நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டுமென அம்மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை, முதுகெலும்பில்லாத அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எனினும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை கூட்டு எதிர்கட்சி முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது. வடக்கில் காணப்படும் யுத்த நினைவுச் சின்னங்கள் என்பது, நாட்டின் அனைத்து மக்களும் அமைதியாய் வாழ்வதற்கு வழி செய்த இராணுவ வீரர்களை நினைவுக்கூருவதற்கான நினைவுச் சின்னங்கள் என்பதை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிந்துக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.