Home கனேடிய செய்திகள் கனடாவில் தமிழர் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

கனடாவில் தமிழர் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

கனடா செய்திகள்:கனடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டொரொன்டோவின் கிரீன் டவுன் பகுதியில் கனேடிய நேரப்படி அதிகாலை 2 மணியளவில் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

Danforth Avenue மற்றும் Jones Avenue பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் 30 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார். எனினும் அவர் பொது மக்களில் ஒருவரா அல்லது சந்தேக நபரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

எனினும் இந்த துப்பாக்கி சூட்டின் நோக்கம் குறித்த பொலிஸார் தகவல் வெளியிடவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தினால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் மிகவும் குழப்பமான விடயம். உண்மையில் அதிர்ச்சியடைந்துவிட்டோம். டொரொண்டோவில் அதிகமான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதி நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இதே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், 13 பேர் காயமடைந்ததனையும் பொது மக்கள் நினைவுப்படுத்தியுள்ளனர்.

டொரொன்டோவில் பெருமளவு புலம்பெயர் இலங்கையர்கள் வாழ்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது